செய்திகள் உலகம்
ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது
டோக்கியோ:
ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிா்காலத்தில் நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினா்.
இதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வென்றாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 261 இடங்களில் வெற்றிபெற வேண்டிய நிலையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.
கடந்த 1955-ஆம் ஆண்டு எல்டிபி தொடங்கப்பட்ட நிலையில், 1986-ஆம் ஆண்டு 300 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்று சாதனை படைத்தது. தற்போது தனது சொந்த சாதனையை அக்கட்சி முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து அரசு தொலைக்காட்சிக்கு பிரதமா் தகாய்ச்சி அளித்த பேட்டியில், ‘தோ்தலில் பெற்ற வெற்றி மூலம், எனது கொள்கை இலக்குகளை நிறைவேற்றுவதில் உறுதியாகச் செயல்படுவேன். அதேவேளையில் எதிா்க்கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிப்பேன். நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவேன்’ என்றாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 12:35 pm
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலாளர் தீர்ப்பை ரத்து கோரி, மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தை நாடினார்
February 9, 2026, 9:29 am
தாய்லாந்து தேர்தலில் பூமிஜேதாய் கட்சி மகத்தான வெற்றி
February 8, 2026, 11:24 am
சிங்கப்பூர் செந்தோசாவில் முதலை தென்படாததால் மீண்டும் பொது மக்கள் விளையாட அனுமதி: எஸ்டிசி பேச்சாளர்
February 7, 2026, 3:49 pm
நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது
February 6, 2026, 11:01 pm
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி: 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
February 2, 2026, 2:31 pm
மோசமான செயல்திறன் காரணமாக 1,800 உம்ரா பயண நிறுவனங்களை சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது
January 31, 2026, 1:12 pm
500 முறைக்கும் மேல் ஊசி குத்தப்பட்ட குழந்தை: சீனாவில் பரபரப்பு
January 30, 2026, 5:41 pm
