நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி

ராய்ப்பூர்:

சத்தீஷ்கரில் விவசாயி ஒருவர் தனது மகளின் கனவை நிறைவேற்ற செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்குள்ள ஜஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத்.

இவர் விவசாயியான தனது தந்தையிடம் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி கேட்டார். ஆனால் விவசாயியான பஜ்ரங் ராமுவால் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்கூட்டர் வாங்க முடியவில்லை.

ஆனாலும் தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதற்காக தினமும் தனது கையில் கிடைக்கும் நாணயங்கள், ரூபாயை ஒரு உண்டியலில் போட்டுக்கொண்டே வந்தார்.

தொடர்ந்து 6 மாதங்கள் உண்டியலில் போட்டதால் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது. உடனே அந்த நாணயங்களை ஒரு சாக்குமூட்டையில் போட்டு எடுத்துக்கொண்டு அங்குள்ள ஹோண்டா ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் சென்றார்.

ஷோரூம் மேலாளர் ஆனந்த் குப்தா விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்தார்.

உடனே நாணயங்களை வேண்டாம் என்று சொல்லாமல் அவற்றை அப்படியே வாங்கி ஊழியர்களிடம் கொடுத்து அவற்றை எண்ணச் சொன்னார்.

அதோடு அவர் தனது ஊழியர்களிடம், "இது பணத்தைப் பற்றியது அல்ல, இது கடின உழைப்புக்கான மரியாதை பற்றியது. நம் அனைவரையும் ஊக்குவிக்கும் ஒருவருக்குச் சேவை செய்வது ஒரு மரியாதை'' என்று தெரிவித்தார்.

நாணயங்களை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. எஞ்சிய பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்ட படி கடனுதவியுடன் புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் விவசாயியிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஸ்கூட்டர் சாவியை தனது தந்தையிடம் இருந்து சம்பா தனது கையில் வாங்கியவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அவர்கள் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாக பரவியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset