செய்திகள் இந்தியா
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
மும்பை:
இந்தியாவின் மும்பையில் இருந்து நேற்று (22) அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்கே திரும்பியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் AI 191 மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி அருகே நெவார்க் நகரத்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை அடையாளம் கண்ட விமானிகள் குழு விமானத்தை உடனடியாக மீண்டும் மும்பைக்கே திருப்பியுள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து பயணிகளிடம் தெரிவித்த விமான நிர்வாகம், அவர்களை பாதுகாப்பாக இறக்கி தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளதுடன் பின்னர், அவர்கள் வேறு விமானத்தில் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, நியோயார்க் நகரத்தில் இருந்து மும்பை புறப்பட இருந்த விமானம் AI 144 ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
