நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

கண்ணூர்: 

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் மாநிலம் தனது தனி அடையாளத்தை இழந்துவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை திறந்து வைத்த பேசிய அவர், சங் பரிவார் கொள்கைகள் அதிகரிக்கும் விஷயத்தில் கேரள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ், பாஜக முன்னிறுத்தும் கொள்கைகள் கேரளத்தில் முக்கியத்துவம் பெற்றால், நமது மாநிலம் தனது தனி அடையாளத்தையும், பெருமையையும் இழந்துவிடும்.

இப்போதும் நாம் விரும்பும் உடைகளை அணியும் சுதந்திரம் உள்ளது. விரும்பும் உணவை உண்ணும் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம்.

ஆனால், ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தில் உள்ள மாநிலங்களில் மக்கள் உணவுப் பழக்கம், உடையணிதல் உள்ளிட்ட காரணங்களுக்காக தாக்கப்படுகிறார்கள். கொலையும் செய்கிறார்கள்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset