
செய்திகள் இந்தியா
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
பாட்னா:
பிஹாரில் 3 ஜன் சுராஜ் வேட்பாளர்களை வாபஸ் பெறக் கோரி பாஜக மிரட்டுவதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
இதனால் 3 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிகார் சட்டமன்ற தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், தேர்தலில் யார் வென்றாலும் கவலையில்லை.
நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற பிம்பத்தை பாஜக கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
ஆனால், புதிய கட்சியான ஜன் சுராஜ் கட்சியை கண்டு தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுகிறது.
ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் கட்சியின் தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவு மனுவை வாபஸ் பெற்றார். பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என தனாபூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
முதுர் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கடத்தியதாக பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், அவர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்.
எத்தனை வேட்பாளர்களை பாஜக இழுத்தாலும், நாங்கள் இந்த தேர்தலில் கடுமையாக போராடுவோம். பிஹாரில் மாற்றம் வரும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:04 pm
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm