நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்தது; மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்

ஜகர்த்தா:

இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை வெடித்ததில் அதன் அருகில் உள்ள கிராமங்கள் சாம்பலாலும் புகையாலும் சூழப்பட்டுள்ளன. 

அதில் ஒருவர் மாண்டார். குறைந்தது 35 பேர் காயமுற்றனர் என்று இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிலர் கட்டடங்களில் சிக்கிக்கொண்டனர். மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன. 

அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

Semeru volcano on Indonesia's Java island spews hot clouds into the area |  South China Morning Post

12 கிலோமீட்டர் உயரத்துக்குமேல் எரிமலை சாம்பலைக் கக்கியதாய்த் தெரிவிக்கப்பட்டது.

எரிமலை கக்கும் புகையிலிருந்து தப்பிக்க மக்கள் பீதியில் ஓடியதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

எனினும் மோசமான புகை மூட்டத்தினால் மீட்புப்பணிகள் தடைப்பட்டுள்ளன.

-Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset