செய்திகள் ASEAN Malaysia 2025
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம்
வாஷிங்டன்:
டொனால்ட் டிரம்ப் மலேசியா, ஜப்பான், தென் கொரியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணம் சீனாவுக்கு நல்லவராக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வலியுறுத்தியதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட வர்த்தக பதட்டங்கள் இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் மீண்டும் ஒரு நம்பிக்கையான தொனியை வெளிப்படுத்தினார்.
நாங்கள் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம். நான் சீனாவுடன் நல்லுறவையே விரும்புகிறேன்.
அதிபர் ஜி உடனான எனது உறவை நான் மிகவும் மதிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான சந்திப்பின் போது வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடனான நீண்ட சந்திப்பின் போது டிரம்ப் இவ்வாறு கூறினார்.
சந்திக்க அது ஒரு நல்ல இடம் என்று நாங்கள் நினைக்கிறோம், நாங்கள் சந்திப்போம். நான் மலேசியாவில் இருப்பேன். நான் ஜப்பானில் இருப்பேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
