நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தீபாவளி வெடிகளால் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி: 

தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில், டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

பல்வேறு பகுதிகளில் காற்றின் தர குறியீடு 350ஐ கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் காற்று மாசு அளவு மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்றிரவு புதுடெல்லியில் பல இடங்களில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் தாக்கத்தினால் காலை முதலே மோசமான புகைமூட்டம் ஏற்பட்டது.

விமானங்கள் உரிய நேரத்தில் தரை இறங்க முடியாமல் திணறின. ஏற்கெனவே இந்தியத் தலைநகர் காற்று மாறுபாட்டால் பாதிப்படைந்த நிலையில் தீபாவளி வெடிகளால் இன்னும் மோசம் அடைந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset