
செய்திகள் இந்தியா
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
அயோத்தி:
அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.
தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக் கரையின் 56 படித்துறைகளில் நேற்று மாலை 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய், 55 லட்சம் பருத்தி திரிகள் பயன்படுத்தப்பட்டன. 33,000-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் விளக்குகளை ஏற்றி னர். ஒரே நேரத்தில் 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய உலக சாதனை ஆகும்.
சரயு நதியின் படித்துறைகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.
1,100 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற உருவங்களை மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm