நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330

ஜெய்பூர்:

பண்டிகைகளுக்குச் சிலர் சொகுசுப் பொருள்களை விரும்புவது உண்டு.

சொகுசு ஆடைகள், சொகுசு அன்பளிப்புகள் என்று பல வகை உண்டு.

இப்போது சொகுசுப் பலகாரங்கள் டிரெண்டிங்கில் உள்ளன

இந்தியாவின் ஜெய்பூர் நகரில் அஞ்சலி ஜெயினின் கடையில் "ஸ்வர்ன் பிரசாதம்" என்கிற சொகுசு இனிப்புப் பலகாரம் விற்கப்படுகிறது.

அது தீபாவளிக்காகவே சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது.

ஒரு கிலோ சுமார்  
RM5330 வெள்ளி (111,000 இந்திய ரூபாய்). அமெரிக்க டாலரில் US$1,261 

ஒரு துண்டின் விலை சுமார் 44 வெள்ளி (3,000 ரூபாய்).

ஒவ்வொரு துண்டும் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் விற்கப்படுகிறது.

அதுவே இந்தியாவின் ஆக விலை உயர்ந்த இனிப்புப் பலகாரம் என்கிறது NDTV செய்தி நிறுவனம்.

பைன் கொட்டைகள், குங்குமப்பூ, சாப்பிடுவதற்கேற்ற தங்கப் பொடி ஆகியன கலந்து அந்தப் பலகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடையில் விலையுயர்ந்த வேறு இனிப்புப் பலகாரங்களும் விற்கப்படுகின்றன

ஆதாரம்: NDTV

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset