நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்

புது டெல்லி: 

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளது குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுன சாமியார் ஆகிவிடுவதாக காங்கிரஸ் விமர்சித்தது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்  வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என எனது நண்பர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருக்கிறார்.

ஆனால், அந்த நல்ல நண்பர் திடீரென மவுன சாமியார் ஆகிவிடுகிறார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறும்போதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கும் என மோடி கூறியுள்ளார் என ட்ரம்ப் கூறும்போதும் அவர் மவுன சாமியாராகிவிடுகிறார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset