நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்

காந்தி நகர்: 

குஜ​ராத் பாஜக அரசின் புதிய அமைச்​சரவை நேற்று பதவி​யேற்​றது. கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவி​யேற்​றனர்.

குஜ​ராத்​தில் முதல்​வர் பூபேந்​திர படேல் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சி​யில் உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர்த்து குஜ​ராத் அமைச்​சர்​கள் 16 பேரும் நேற்று முன்​தினம் பதவி வில​கினர். 

இவர்​களில் கனு​பாய் மோகன்​லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்​பாய் படேல், குன்​வர்​ஜி​பாய் மோகன்​பாய் பவாலி​யா. பர்​ஷோத்​தம்​பாய் சோலங்கி ஆகிய 4 பேரை தவிர மற்ற அனை​வரின் ராஜி​னா​மாவை முதல்​வர் ஏற்​றுக்​கொண்​டார்.

இந்​தப் பட்​டியல் நேற்று காலை​யில் வெளி​யானது. இதில் கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாக்​கூர், பிர​வீன்​கு​மார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்​ஷ்னா வகேலா, குன்​வர்ஜி பவாலியா உள்​ளிட்ட 21 பேர் இடம் பெற்​றிருந்​தனர்.

இதையடுத்து காந்​திநகரில் நடை​பெற்ற விழா​வில் 21 பேரும் அமைச்​சர்​களாக பதவி​யேற்​றனர். இவர்​களுக்கு ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​ரத் பதவிப் பிர​மாணம் செய்​து​வைத்​தார். விழா​வில் பாஜக தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான ஜே.பி.நட்டா பங்​கேற்​றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset