நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொக்கோ சத்தியாவுக்கு நம்பிக்கை ஊடகம் சார்பில் தீபாவளி அன்பளிப்பு; எந்தவொரு கவலையும் இன்றி தீபாவளி கொண்டாடுகிறேன்: சத்தியா

கோலாலம்பூர்:

நாட்டின் பிரபல மூத்த கலைஞர் தொக்கோ சத்தியாவுக்கு நம்பிக்கை ஊடகம் சார்பில் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

தமிழ், மலாய் என இரு மொழிகளிலும் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர் சத்தியா.

குறிப்பாக நகைச்சுவையில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இன்று வரை இல்லை.

இந்நிலையில் சத்தியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக அவரின் ஒரு கால் அறுவை சிகிச்சையின் வாயிலாக நீக்கப்பட்டது.

தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நம்பிக்கை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கசாலி, தலைமை ஆசிரியர் ஃபிதாவுல்லாஹ், தலைமை நிருபர்  பார்த்திபன் நாகராஜன் ஆகியோர் சத்தியாவை நேரில் சந்தித்தனர்.

அதோடு தீபாவளியை முன்னிட்டு சத்தியாவுக்கு அன்பளிப்புகளையும் வழங்கினர்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் அதிகமான வேலைகள் இருக்கும். பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பேன்.

ஆனால் இப்போது பரபரப்பு சற்று குறைந்தாலும் கலைத் துறையை சார்ந்த வேலைகள் செய்கிறேன்.

இதனால் எந்தவொரு கவலையும் இன்றி இவ்வாண்டின் தீபாவளியை அமைதியாகக் குடும்பத்தாரோடு கொண்டாடுகிறேன் என்று சத்தியா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset