நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் பொதுமக்களை பிரதமர் சந்தித்தார்: தீபாவளி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் பொதுமக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.

அதே வேளையில் தீபாவளி ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மாலை 4 மணியளவில் வந்த பிரதமரை, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வரவேற்றார்.

பிரதமர் மெட்ராஸ் பேக்கரியில் இந்திய ஊடகத்தினருடன் சுமார் 30 நிமிடங்கள் மதிய தேநீர் அருந்தினார்.

பின்னர் அவர் நடைப்பயணமாகச் சென்று, பிரிக்பீல்ட்ஸில் உள்ள லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை தளத்தில் உள்ள பல கடைகளைப் பார்வையிட்டார்.

பிரதமர் வர்த்தகர்கள் மக்களுடன் கலந்தார்.

அவர்கள் பிரதமருடன் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்து,  வீடியோக்களைப் பதிவு செய்துக் கொண்டனர்.

பிரதமர் சிறு வணிக சமூகத்தின் மீது, குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய சமூகத்தினரிடையே அவருக்கு ஆழ்ந்த அக்கறை இருப்பது இந்த வருகை தெளிவாகத் தெரிந்தது.

இது தீபாவளிக்கு முந்தைய வருகை மட்டுமல்ல.

மக்களின் நாடித்துடிப்பையும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் தேசிய வளர்ச்சியின் பலன்களைத் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான உறுதியையும் புரிந்துகொண்ட ஒரு பிரதமரின் மகத்தான  சின்னம் இது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset