நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா செயற்குழுவை காட்டிலும் நிதி நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும்; டத்தோஸ்ரீ ரமணன் கண்கானிப்பார்: பிரதமர்

கோலாலம்பூர்:

மித்ராவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் தான்
டத்தோஸ்ரீ ரமணனுக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்திய சமுதாயம் நேரடியாக பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மித்ராவுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மித்ரா செயற்குழுவின் நடவடிக்கைகளை நான் நேரடியாக பார்க்கவில்லை.

இதன் அடிப்படையில் தான் அதனை கண்காணிக்கும் பொறுப்பு டத்தோஸ்ரீ ரமணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சராக இருக்கும் அவர் தற்போது மித்ரா நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்வார்.

இதற்காக பிரபாகரன் நீக்கப்பட்டார். செயற்குழு கலைக்கப்பட்டது என்று அர்த்தமாகி விடாது.

மித்ரா செயற்குழு இருந்தாலும் இல்லையென்றாலும் 100 மில்லியன் ரிங்கிட் இந்திய மக்களை சென்றடைய வேண்டும்.

இது தான் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக உள்ளது.

மேலும் இந்திய சமுதாயத்தின் திவேட் உட்பட எந்தவொரு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

குறிப்பாக மித்ரா நிதிகள் அனைத்தும் நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும்.

இதில் ஏன் இடையில் அரசு சாரா இயக்கங்கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாகும்.

ஆக மித்ரா விவகாரத்தை சர்ச்சையாக்காமல் இந்திய சமுதாயத்தின் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset