நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்

புத்ராஜெயா:

சபா மாநிலத் தேர்தல் வரும்  நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் இதனை தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் சபா சட்டமன்றம்  கலைக்கப்படுவதாக மாநில முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலத்தின் 17ஆவது தேர்தல் வரும் நவம்பர் 29ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நவம்பர் 15 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரச்சார காலம் 15 நாட்களாகும் என்று அவர் கூறினார்.

சபா மாநில சட்டமன்றத்தில் 79 இடங்கள் உள்ளன.

அவற்றில் 73 இடங்கள் போட்டியிடுகின்றன, மற்ற ஆறு இடங்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset