நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் துன்புறுத்தல் சந்தேகத்தின் பேரில் 14 வயது மாணவனுக்கு தடுப்புக் காவல்: போலிஸ்

சபாக் பெர்னாம்:

பாலியல் துன்புறுத்தல் சந்தேகத்தின் பேரில் 14 வயது மாணவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

சபாக் பெர்னாம் காவல்துறைத் தலைவர் முஹம்மத் யூசோஃப் அஹ்மது தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இங்குள்ள சபாக் பெர்னாமில் உள்ள ஒரு பள்ளியில் மற்றொரு இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்பட்டரால் அவர் கைது செய்யப்பட்டார்.

காலை 9.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், இடைவேளை நேரத்தில் 15 வயது பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சந்தேக நபர் இந்த செயலைச் செய்துள்ளார்.

அக்டோபர் 13ஆம் தேதி சுங்கை பெசாரில் உள்ள ஜாலான் பாரிட்டில் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

மேலும் சந்தேக நபருக்கான தடுப்புக் காவல் விண்ணப்பம் அக்டோபர் 14 முதல் நாளை வரை வழங்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset