
செய்திகள் மலேசியா
வகுப்பறையில் மற்றொரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; 3 பள்ளி மாணவர்கள், ஒரு முன்னாள் மாணவர் கைது: போலிஸ்
பாலிங்:
வகுப்பறையில் நடந்த மற்றொரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பள்ளி மாணவர்கள், ஒரு முன்னாள் மாணவரும் கைது செய்யப்பட்டனர்.
பாலிங் மாவட்ட இடைக்கால போலிஸ் அகமது சலிமி மாட் அலி இதனை கூறினார்.
மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், சமூக ஊடகங்களில் ஆபாசமான விஷயங்களைப் பரப்பியதாகவும் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 53 வயதான புகார்தாரரிடமிருந்து தனது குழந்தை நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ பதிவு பரவுவது குறித்து பள்ளி ஆசிரியரால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலிசாருக்கு புகார் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக, பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் மாணவரும் அதே நாளில் இரவு 9.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
மேலும் விசாரணையில், சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மே முதல் ஆகஸ்ட் வரை பள்ளியின் வகுப்பறைகளில் பல இடங்களில் குழுக்களாக பாலியல் வன்கொடுமை புரிந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும் விசாரணைக்காக ஆறு கைத்தொலைபேசிகளையும் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 12:28 pm
சபா மாநில தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்
October 16, 2025, 9:53 am
பள்ளிகளில் ஆபத்தான பொருட்களுக்கு தடை விதிப்பதுடன் மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்: சரஸ்வதி
October 16, 2025, 9:51 am
மலேசியா ஜிஎஸ்டி வரிக்கு இன்னும் தயாராக இல்லை: பிரதமர்
October 15, 2025, 10:56 pm
தீபாவளி பரிசாக ஹைலண்ட்ஸ் தோட்ட ஆலய நிலத்திற்கு ஒப்புதல் கிடைத்தது: குணராஜ்
October 15, 2025, 10:08 pm
நிலையான, வளமான மலேசியாவை வடிவமைப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேண்டும்: ஹஜ்ஜா ஹனிபா
October 15, 2025, 5:49 pm