நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் மகளுக்கு 50 அல்ல, 200 கத்தி குத்து காயங்கள் உள்ளன: பாதிக்கப்பட்டவரின் தாய்

கோலாலம்பூர்:

என் மகளுக்கு 50 அல்ல, 200 கத்திக் குத்து காயங்கள் உள்ளன என பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறினார்.

பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலை பள்ளியில் மாணவி ஒருவர் தனது 14 வயது பள்ளித் தோழனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

இந்நிலையில் தனது மகளின் இறுதிச் சடங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வோங் லீ பிங்,

அந்த துயர சம்பவத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறினார்.

இணைய அறிக்கைகள் 50 கத்திக்குத்து காயங்கள் என்று கூறியதாக எங்களுக்குத் தெரியும்,

ஆனால் உண்மையில் என் மகளுக்கு 200 கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

அவளுக்கு 200 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அது வெட்டுக்கள் அல்ல.

ஆனால் கத்திக்குத்து காயங்கள் மேல் வலது பக்கத்திலிருந்து கால் பகுதி வரை இருந்தது.

ஆக என் மகளின் மரணம் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என வோங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset