நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் தேசிய பேராளர் மாநாடு நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும்; தேமு தலைவருக்கு அழைப்பில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகாவின் 79ஆவது தேசிய பேராளர் மாநாடு வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும்.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை அறிவித்தார்.

மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

மேலும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியை நாங்கள் அழைக்க போவது இல்லை.

வழக்கமாக பிரதமர் எங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்.

ஆக இம்மாநாட்டை நான் தான் தொடக்கி வைப்பேன் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 27,000 உதவிப் பொருட்களை மஇகா வழங்கியது.

இதை தவிர்த்து பல இடங்களில் கூடுதலாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அடுத்தாண்டு இதை ஒருமுகப்படுத்தி கிட்டத்தட்ட 50 ஆயிரம் உதவிப் பொருட்களை வழங்க மஇகா இலக்கு கொண்டுள்ளது.

இதை தவிர்த்து மஇகா புதிய தலைமையகத்தின் கட்டுமான பணிகள் குறித்து பேசி இறுதி செய்யப்பட்டது.

விரைவில் கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset