நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தின் கல்வி, நலன் அடிப்படையாக கொண்ட புதிய முயற்சிகளுக்கு 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சமூகத்தின் கல்வி, நலன் அடிப்படையாக கொண்ட புதிய முயற்சிகளுக்கு 42.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூக முயற்சிகள் அமலாக்கக் குழுவின் தலைவர்  டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனை கூறினார்.

இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல புதிய முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த முயற்சிகளில் மித்ராவின் கீழ் கல்வி மடானி எனப்படும் இலவச கல்வித் திட்டம், பெராந்தி சிஸ்வா மூலம் மடிக்கணினிகள் வழங்குதல், தமிழ்ப்பள்ளி பராமரிப்பு, பழுதுபார்ப்பு திட்டமும் இதில் அடங்கும்.

கிளந்தான், திரெங்கானுவில் செயல்படுத்தப்படும் மடானி கல்வித் திட்டத்தின் அணுகுமுறையை எடுத்துக்கொண்டு, 200 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூலம் கல்வி மடானி திட்டத்தில் பயனடைவார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களின் முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் புதிய மடிக்கணினிகளைப் பெறுவார்கள்.

மாணவர் சாதனத் திட்டத்தின் கீழ் 7.95 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 173 தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறிய பழுதுபார்ப்பு, தளவாடங்கள் வாங்குவது, பிற தேவைகளுக்கு ஏற்ப 12.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்படும்.

பள்ளிகளின் பட்டியல் கல்வியமைச்சால் அடையாளம் காணப்படும்.

பேங்க் சிம்பானான் நேஷனல் மூலம் 3.5 மில்லியன் ரிங்கிட் நிதியை உள்ளடக்கிய தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகும்.

இந்த நடவடிக்கை 300 ரிங்கிட்   அல்லது அதிகபட்சமாக 1,750 ரிங்கிட் பெறுவதன் வாயிலாக 1,064 பயனாளிகளுக்கு பயனளிக்கும்.

பெறுநர்களின் பட்டியல் இ-காசேவில் இருந்து  பெறப்படும் என்று அவர் கூறினார்.

பி40 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களுக்கு 2,000 ரிங்கிட்டும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு  3,000 ரிங்கிட்டும் வழங்கப்படும்.

இந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நவம்பர் 17 வரை https://mitra.gov.my என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தர்ம மடானி எனப்படும் சமூக, கலாச்சார மையங்களாக வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை, முன்னர் அறிவிக்கப்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு,

இந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இந்த நவம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை www.perpaduan.gov.my வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் கட்டமாக 1,000 ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதில் 10 சதவீதம் மட்டுமே இயக்க செலவுகள், உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மீதமுள்ளவை மத வகுப்புகள், தேவாரம், நடனம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset