நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா ஜிஎஸ்டி வரிக்கு இன்னும் தயாராக இல்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியா ஜிஎஸ்டி வரி திட்டத்திற்கு  இன்னும் முழுமையாக தயாராக இல்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டில் தொடர்ந்து நிலவும் கசிவுகள் மற்றும் குறைந்த ஊதியங்கள் காரணமாக, சரக்கு,சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த மலேசியா தயாராக இல்லை.

ஜிஎஸ்டி ஒரு வெளிப்படையான, திறமையான அமைப்பாகும்.
இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முறையான கசிவுகள்,  ஊழல்களைக் காரணம் காட்டி அதன் அறிமுகத்தை எதிர்த்ததை நினைவு கூர்ந்தார்.

தார்மீகக் கண்ணோட்டத்தில், மோசமான வறுமையில் தவிக்கும் மக்களிடம் நாம் எவ்வாறு வரி விதிக்க முடியும்?.

இந்த ஜிஎஸ்டி ஒரு நல்ல முறையாக இருந்தது. ஆனால் அதைச் செயல்படுத்த இது சரியான நேரம் இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset