செய்திகள் ASEAN Malaysia 2025
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகலாம்: ஹசான்
கோலாலம்பூர்:
தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கோலாலம்பூரில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
கோலாலம்பூரில் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்வார்.
கோலாலம்பூர் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்டவும், போர் நிறுத்தத்தை கடைபிடிக்கவும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசியத் தலைமையின் கீழ் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகள், ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்ச நிலை மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் அக்டோபர் 26 ஆம் தேதி மலேசியாவுக்கு வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
