நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது: ஹசான்

கோலாலம்பூர்:

மியான்மருக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆசியான் அனுப்பாது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் இதனை கூறினார்.

டிசம்பர் 28 முதல் மியான்மாரில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கு பார்வையாளர் குழுவை அனுப்ப ஆசியான் ஒப்புக்கொள்ளாமல் போகலாம்.

மலேசியா பார்வையாளர்களை அனுப்ப ஒப்புக்கொண்டதாகக் கூறும் மியான்மார் செய்தி அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், 

இந்த விஷயம் முதலில் அனைத்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்களாலும் விவாதிக்கப்படும் என்றார்.

இந்த விஷயம் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

ஆனால் ஆசியான் ஒப்புக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை.

ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset