நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் விவாதங்கள் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மலேசியா உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் விவாதங்கள் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதை மலேசியா உறுதி செய்யும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு மலேசியாவில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டின் தலைவராக, நடைபெறும் ஒவ்வொரு விவாதமும் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை மலேசியா உறுதி செய்யும்.

கேஎல்சிசியில் அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்டுள்ள உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பு நாடுகள், உரையாடல் கூட்டாளர்களுக்கு பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், நன்மைகளை வழங்கவும் மலேசியா உரிய நடவடிக்கையை எடுக்கும்.

இதனால் முழு அரசு இயந்திரங்களையும் தொடர்புடைய நிறுவனங்களையும் மிகுந்த கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset