
செய்திகள் மலேசியா
வகுப்பறையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்ட்ரூ டேவிட்
கோலாலம்பூர்:
வகுப்பறையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான சம்பவத்திற்கு கல்வியமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஇகா பணிப் படையின்
தலைவர் அன்ட்ரூ டேவிட் இதனை கூறினார்.
மலாக்கா அலோர் காஜாவில் நடந்த இந்த துயர சம்பவத்தில் படிவம் 3 மாணவி பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த கொடூரமான செயல் பதிவு செய்யப்பட்டு மற்ற மாணவர்களிடையே பரவியது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கிறது.
இந்த சம்பவம் பள்ளி, தேசிய கல்வி முறையின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, பொறுப்பு அடிப்படையில் ஒரு பெரிய தோல்வியாகும்.
பள்ளிகள் குழந்தைகள் கற்றுக்கொள்ள பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.
உயிருக்கு பயம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் இடமாக பள்ளி இருக்கக்கூடாது.
இதுபோன்ற குற்றங்கள் பள்ளி வளாகங்களில், பள்ளி நேரங்களில் நடப்பதும் பல மாணவர்கள் இதில் ஈடுபடுவதும் மிகவும் கவலையளிக்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது போன்ற வழக்குகளுக்கு மேலதிகமாக, மாணவர்களுக்கு எதிரான தவறான நடத்தைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளும் சமீபத்தில் உள்ளன.
இதற்கு பள்ளி நிர்வாகம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
தற்போதுள்ள பாதுகாப்புக் கொள்கைகள், மாணவர் கண்காணிப்பு அமைப்புகள், ஒழுங்கு நடைமுறைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாலியல் குற்றங்கள் குறிப்பாக பள்ளிகளில் நடப்பது ஒருபோதும் சமரசம் செய்யப்படாது அல்லது மன்னிக்கப்படாது என்ற தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 11:25 pm
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்: கல்வியமைச்சர்
October 11, 2025, 11:21 pm
வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை; படிவம் 5இன் 4 மாணவர்களுக்கு தடுப்புக் காவல்
October 11, 2025, 11:15 pm
லெபோ அம்பாங்கிற்கு செட்டித் தெரு என பெயர் சூட்ட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 11, 2025, 11:08 pm
2026 பட்ஜெட் இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்டது: டத்தோஸ்ரீ ரமணன்
October 11, 2025, 9:40 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 2:13 pm
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 11, 2025, 1:05 pm