
செய்திகள் மலேசியா
லெபோ அம்பாங்கிற்கு செட்டித் தெரு என பெயர் சூட்ட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
பாரம்பரியமான லெபோ அம்பாங்கிற்கு செட்டித் தெரு என்று
பெயர் சூட்ட வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டிலான தீபாவளி கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்புப் பிரமுகராக டத்தோஸ்ரீ சரவணன் கலந்துகொண்டார்.
மிகவும் சிறப்பாக உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடலோடு நிகழ்ச்சி களைகட்டியது.
மலேசிய இந்தியர்கள் 3 குழுக்களாக மலேசியாவிற்கு வந்தார்கள் என்பது வரலாறு.
முதலாவது தொழில்முறை நிபுணர்கள், இரண்டாவது தோட்டத்தில் பணிபுரிய வந்தவர்கள், மூன்றாமவர்கள் வணிகர்கள்.
குறிப்பாக நகரத்தார் சமூகத்தினர் அவர்கள் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கிய இடம் தான் இந்த லெபோ அம்பாங்.
ஆகவே கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா அவர்கள் இந்த இடத்தை முன்பு இருந்தது போல, செட்டித் தெரு என்று பெயர் சூட்ட வேண்டும்.
இதை எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
வரலாறு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அந்தந்த இடத்தில் அதன் பூர்வீகமும், தனித்துவமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதை டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் தமது உரையில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 12:04 am
வகுப்பறையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்ட்ரூ டேவிட்
October 11, 2025, 11:25 pm
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்: கல்வியமைச்சர்
October 11, 2025, 11:21 pm
வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை; படிவம் 5இன் 4 மாணவர்களுக்கு தடுப்புக் காவல்
October 11, 2025, 11:08 pm
2026 பட்ஜெட் இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்டது: டத்தோஸ்ரீ ரமணன்
October 11, 2025, 9:40 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் பினாங்கில் கோலாகலமாக நடைபெற்றது: டத்தோ தனேந்திரன்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 2:13 pm
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 11, 2025, 1:05 pm