நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட் இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்டது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

இன வேறுபாடின்றி மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளங்குகிறது.

தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று  2026ஆம் ஆண்டுக்காம பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் பயனளிக்கும் மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாகும்.

வளர்ச்சி, கல்வித் துறைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உதவி, பொருளாதார வாய்ப்புகள் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமாகவும் விரிவாகவும் விநியோகிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.

இந்த ஆண்டு அமைச்சின் கீழ் உள்ள மித்ரா, அமானா இக்தியார், தெக்குன் ஆகியவற்றுக்கு 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக மேலாண்மை செலவுகளுக்கு மட்டுமல்ல, மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மட்டும் நாங்கள் தீர்மானிக்க முடியாது. 

எடுத்துக்காட்டாக, கல்வியமைச்சுக்கு 66 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டைப் பெற்றது.

இதில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளும் அடங்கும்.

இதில் கம்போங் பாரு சீனா, கம்போங் இந்தியாவின் மேம்பாட்டிற்காக 90 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் அடங்கும்.

இன்று கோத்தா டாமன்சாராவில் தீபாவளியுடன் இணைந்து மடானி கூட்டுறவு, தொழில்முனைவோர் விற்பனை  திட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset