நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை அறிவித்தார்.

மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி இன்று தலைநகரில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் இவ்விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களை ஒன்றுபடுத்தும் நோக்கில் இச்சங்கம் தொடங்கப்பட்டது.

குறிப்பாக அதிகமான உறுப்பினர்கள் பல்வேறான ஊடக நிறுவனங்களில் இருந்து ஒற்றுமையாக உள்ளனர்.

இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் இச்சங்கம் இன்னும் சிறப்பாக செயல்பட என்னுடைய சார்பில் 25 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை தருகிறேன்.
அதே வேளையில் சற்று முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னை தொடர்பு கொண்டு சங்கத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்குவதாக கூறினார்.

ஆக மொத்தத்தில் 75 ஆயிரம் ரிங்கிட் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தை வந்து சேரும்.

இந்நிதி இச் சங்கத்தை மேலும் வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன் என்று கோபிந்த் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset