நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மலேசிய ஐயப்ப சுவாமி சேவா  சங்கம் உரிய தீர்வை காணும்: யுவராஜா குருசாமி

பத்துமலை:

பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மலேசிய ஐயப்ப சுவாமி சேவா  சங்கம் உரிய தீர்வை காணும்.

அச்சங்கத்தின் தலைவரும் பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் தலைவருமான யுவராஜா குருசாமி கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் பக்தியில் ஒற்றுமை எனும் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவின் அகில பாரதிய ஐயப்பா தர்மா பிரச்சார சபாவுடன் இணைந்து இந்நிகழ்வு நடைபெற்றது.

கிட்டத்தட்ட 100 ஐயப்ப சுவாமி பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் ஐயப்ப சுவாமி வழிபாட்டை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆக இப்பக்தர்களிடையே ஒற்றுமை வலுப்படுபத்தும் நோக்கில் இன்றைய நிகழ்வு நடத்தப்பட்டது.

அதே வேளையில் ஐயப்ப சுவாமி வழிபாடு குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இதனிடையே பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மலேசிய ஐயப்ப சுவாமி சேவா  சங்கம் உரிய தீர்வை கண்டு வருகிறது.

குறிப்பாக விமான நிலையத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு வழியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உதவியுடன் கடந்தாண்டு அந்த சிறப்பு வழி பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இப்படி பக்தர்களின் நலனுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தான் சங்கத்தின் இலக்கு என்று யுவராஜா குருசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset