நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்

தாப்பா:

தாப்பாவில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கினார்.

தீபாவளி பெருநாள் வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இப்பெருநாளை வசதிக் குறைந்த மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பரவலாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் 12 இடங்களில் இன்று தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் என அனைவருக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் அன்பளிப்புகளைப் பெற்று சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்,

தீபாவளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். 
குறிப்பாக அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset