நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை; படிவம் 5இன் 4 மாணவர்களுக்கு தடுப்புக் காவல்

மலாக்கா:

வகுப்பறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் படிவம் 5இன் 4 மாணவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ துல்கைரி மொக்தார் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வாரம் அலோர்காஜாவில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் படிவம்  3  மாணவி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, படிவம் 5இல் படிக்கும் நான்கு மாணவர்கள் ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்பிஎம் வேட்பாளர்களான 17 வயதுடைய அனைத்து ஆண் சந்தேக மாணவர்களுக்கும் எதிராக இன்று முதல் அக்டோபர் 16 வரை மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த உதவிப் பதிவாளர் எஸ்.ஆர். அர்த்தனாவால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375பி இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது.

வழக்கு இன்னும் போலிஸ் விசாரணையில் உள்ளது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் சுருக்கமாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset