நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைதானம் என்பது விளையாடுவதற்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் அடித்தளம்: பிரதமர் அன்வார்

ஈப்போ:

பேராக்கில் இன்று காலை பந்தர் மேரு ராயாவில் உள்ள புலதன் சுல்தான் அஸ்லான் ஷாவில் 2025 தேசிய விளையாட்டு தினத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

தோல் நிறம், மொழி அல்லது தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு என்பது நம்மை ஒன்றிணைக்கும் ஒரு தளம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 

மைதானத்தில் குறிப்பாக தடகளத்தில், நாம் ஒரே தேசமாக நிற்கிறோம். அது தான் மலேசியா எனும் தேசம்.

விளையாட்டு என்பது வெற்றியைத் தேடுவதற்கான ஒரு களம் மட்டுமல்ல, மக்களிடையே மன உறுதி, ஒழுக்கம், ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஓர் இடம்.

விளையாட்டு மனப்பான்மை தொடர்ந்து செழித்து வளர, சாம்பியன்களை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், ஒழுக்கமான, உற்சாகமான, ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வலுப்படுத்தும்.

நாம் அனைவரும் சேர்ந்து விளையாட்டை ஒற்றுமையின் பாலமாகவும், சகோதரத்துவத்தின் களமாகவும், மலேசியாவின் வலிமையின் அடையாளமாகவும் மாற்றுவோம் என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset