நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்: கல்வியமைச்சர்

கோலாலம்பூர்:

மலாக்காவில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான
வீடியோ பரவுவதை எம்சிஎம்சி தடுக்க வேண்டும்.

இதற்கான வலியுறுத்தலை
கல்வியமைச்சு வழங்கியுள்ளது என அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

மலாக்காவில் ஒரு பெண் மாணவி வகுப்பறையில் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானார்.
இது தொடர்பான காணொலியைப் பரப்புவதை உடனடியாகத் தடுக்குமாறு மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தை கல்வியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

கல்வியமைச்சு இந்த பிரச்சினையை தீவிரமாகக் கருதுவதாகவும், சம்பந்தப்பட்ட எந்தவொரு நபருடனும் சமரசம் செய்யாது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அவமானத்தை அதிகரிப்பதைத் தவிர்க்க, பொதுமக்கள் இந்தக் காட்சிகளைப் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பிரச்சினை (வீடியோ) பாதிக்கப்பட்டவரும் ஒரு மாணவியே என்பதால் காணொலி பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பிடம் அமைச்சு கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset