செய்திகள் உலகம்
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
ஆஸ்லோ:
அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது, 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
டிரம்ப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாததை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
கடந்த 1901ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த திங்கட்கிழமை முதல் வெளியாகி வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நேற்று உலகமே எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 அமைப்புகள் சார்ந்தது.
வழக்கமாக நோபல் அமைதி பரிசு என்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை தனக்குத் தான் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக சொல்லி வந்தது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட மொத்தம் 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கண்டிப்பாக தந்தே ஆக வேண்டும் என்று டிரம்ப் தினமும் பேட்டியளித்ததால் பரபரப்பு அதிகமானது.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் விருது அறிவிப்பை வெளியிட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
