நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ்: 

கத்தார் வி்மானத்தில் பயணித்த  சைவ பயணிக்கு அசைவ உணவு அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக கூறி, பயணியின் மகன் 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகி உள்ளது.

அன்றைய தினம் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டுள்ளார் 85 வயதான அசோகா ஜெயவீரா.
பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் முன்பதிவு செய்த போதும் சைவ உணவு இல்லை அசைவ உணவுதான் உள்ளது என்று கூறி விமான பணிப்பெண் வழங்கி உள்ளார்.

வேறு வழியின்றி அதை வாங்கி சாப்பிட்ட அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுமுதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு வலுக்கட்டாயமாக அளிக்கப்பட்ட அசைவ உணவுதான் காரணம் என்று கூறி அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset