நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய கைதி உக்ரைன் போரில் சரணடைந்து தப்பிய குஜராத் இளைஞர்

புது டெல்லி: 

ரஷியாவில் படிக்கச் சென்று சிறைக் கைதியான குஜராத் இளைஞர் முஹம்மது உசைன்,  போரில் ஈடுபடுவதாகக் கூறி உக்ரைன் ராணுவத்தில் சரணடைந்த பின் தப்பி உள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக கைதிகளை ரஷியா போருக்கு அனுப்பி வருகிறது.

இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிவிடலாம் எனற திட்டத்துடன் ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் சண்டையிடும் ஒப்பந்தத்தில் ஹுசைன் கையொழுத்திட்டு 16 நாள்கள் போர் பயிற்சியும் பெற்றுள்ளார்.

உக்ரைன் எல்லை போர் முனைக்கு சென்றதும் ஹுசைன் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.

இந்தத் தகவல் எல்லாம் விடியோவாக பதிவிட்டு உக்ரைன் வெளியிட்டுள்ளது.

ரஷியா சென்ற ஹுசைனுக்கு என்ன ஆனது என்று  தெரியாமல் இருந்தது. அவரை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு வர ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்று குஜராத்தில் உள்ள அவரது தாய் மாமா அப்துல் இப்ராஹிம்  வேண்டுகோள் விடுத்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset