நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது 

மணிலா: 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6ஆக பதிவாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நில அதிர்வை உணர்ந்து மக்கள் வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர்.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த அக்டோபர் 1ம் தேதி விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது ஒரே மாதத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset