நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய மருத்துவ ஹெலிகாப்டர்: மூவர் காயம்

கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது.

சம்பந்தப்பட்ட மருத்துவ ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் விரைவுச் சாலை 50ல் மோதியது.
அச்சம்பவத்தில் மூவருக்குக் காயம் ஏற்பட்டது.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து காரணமாக அந்த விரைவுச் சாலையில் சில சாலைத் தடங்கள் மூடப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் அவசர உதவி ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விபத்து இரவில்  நிகழ்ந்ததாகவும் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset