நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்சில் அரசியல் நெருக்கடி: புதிய பிரதமர் செபாஸ்டியன் பதவி விலகினார் 

பாரிஸ்:

நாட்டின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகொர்னு (Sebastien Lecornu) அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்தில் பதவி விலகிவிட்டார்.

புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அரசியல்வாதிகள் பலர் எச்சரித்த பிறகு அவர் அந்த முடிவை எடுத்தார்.

லெகொர்னுவின் கூட்டணியினரும் எதிர்த்தரப்பினரும் அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிலர், அமைச்சரவை மிகவும் வலசாரியாக இருக்கிறது என்று குறைகூறினர். வேறு சிலர், அமைச்சரவையில் போதிய வலசாரி அரசியல்வாதிகள் இல்லை என்றனர்.

இன்னும் எவ்வளவு நாள் அரசியல் நெருக்கடி நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

லெகொர்னு பதவி விலகிய பிறகு உடனே தேர்தலை நடத்தவேண்டும் என்று வலசாரி கட்சியான National Rally கூறியது.

அதிபர் மக்ரோன் 2022ஆம் ஆண்டில் மீண்டும் பதவியேற்றதிலிருந்து நிலையற்ற சூழல் நிலவுகிறது. மக்ரோனின் தவணையில் இதுவரை இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் 5 முறை பிரதமர்கள் மாறிவிட்டனர்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset