நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

நாட்டில் 6 மாநிலங்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இயற்கை வளங்கள்,  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் ஹுவாங் தியோங் சிய் இதனை மக்களவையில் தெரிவித்தார்.

பகாங், திரெங்கானு, பேரா, நெகிரி செம்பிலான், சபா, சரவா ஆகிய ஆறு மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மலேசியாவின் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை, மலேசிய நில அதிர்வு தொழில்நுட்ப வரைபடம் ஆகியவற்றின் செயலில் உள்ள பிழை வரைபட ஆய்வின் வாயிலாக இது கண்டறிந்துள்ளது.

குறிப்பாக இது இயற்கை பேரழிவு அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடியவை என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா), உள்ளூர் பல்கலைக்கழகங்கள், தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மலேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தைப் புதுப்பிப்பது தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset