செய்திகள் மலேசியா
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
தைப்பிங்:
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 8 லட்சம் ரிங்கிட் செலவில் இந்த ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேகத்தைக காண நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இநத ஆலய வளர்ச்சிக்கு மாநில அரசு நிதி உதவி, பொதுமக்கள் வழங்கி நன்கொடைகள் வழங்கியுள்ளதாக ஆலயத் தலைவர் ஜி. சுரேந்திரன் ஆழ்வார் கூறினார்.
இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் கடந்த 2013 ஆண்டு நடைபெற்றது . இன்று நடைபெற்றது இரண்டாவது கும்பாபிஷேகம்.
இந்த கும்பாபிஷேக விழா சிவஸ்ரீ ஞான சிலன் சிவாச்சாரியரர் தலைமையில் நடந்தது.
காலை மணி 10. 30 மணியளவில் யாகசாலையில் சிறப்பு வழிபாட்டு ஆராதனைக்குப் பின்னர் கும்ப பறப்பாடு நடைபெற்று ஆலயம் வலம் வலம் வந்து ஓம் நமச்சிவாய என்ற முழகத்துடன் ஆலய கலசங்களுக்கு புணித நீ்ர் ஊற்றப்பட்டது.
அவுலோங்கில் வசித்து வந்த இந்துக்கள் தங்களின் வழிபாட்டிற்கு இந்த ஆலயத்தை உருவாக்கியதாக ஆலயத் தலைவர் ஜி. சுரேந்திரன் ஆழ்வார் கூறினார்.
இந்த ஆலயம் படிபடியாக நிர்மாணிக்கப்ட்டு் இன்று அற்புதமான முறையில் காட்சியளிக்கிறது.
இந்த கும்பாபிஷேக விழா முன்னிட்டுட்டு நேற்று முதல் நாள் இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலத்துக்கொள்ள ஆலந்த்திற்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வருகை அளித்து பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
அர்ச்சகர் தொழில் துறையில் பற்றாக் குறையை போக்க அத்துறையில் இளைஞர்கள் ஈடுபடுத்த அர்ச்சகர் பயிற்சியை வழங்க பேரா மாநில அரசு தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
இந்து ஆகம முறைப்படி அர்ச்சகர் தொழிலை மேற்கொள்ள வேத பாடசாலையில் பயிற்சியை வழங்க இந்து அர்ச்சகர் சங்கத்துடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.
நாட்டில் பல ஆலயங்களில் அர்ச்சகர் பற்றாக் குறை நிலவிவருகிறது.
அதே வேளையில் நாட்டில் நடைபெறும் ஆலய கும்பாபிஷேகங்களை நடத்த தகுதியான அர்ச்சகர் இல்லை என்ற குறைபாடுகள் முன் வைத்த சில ஆலய நிர்வாகங்கள் இந்தியா, இலங்கையில் இருந்தும் அர்ச்சகர்களை அழைத்து வருகிறார்கள்.
பேரா மாநிலத்தை பொறுத்த வரை அண்மைய காலமாக நடைபெற்ற ஆலய கும்பாபிஷேக விழாவில் உள் நாட்டைச் சேர்ந்த அரச்சகர்கள் ஆகம முறைப்படி கும்பாபிஷேகத்தை வழி நடத்தப்பட்டதை காண முடிந்தது .
இது தொடர வேண்டும். ஆகவே அர்ச்சகர் தொழில் பயிற்சி வகுப்பை நடத்த மாநில அரசு நிதி உதவி அளிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டுட்டு நேற்று முதல் நாள் இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலத்துக்கொளள வருகை அளித்த ஆட்சிக் டத்தோ அ. சிவநேசன் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
