நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்

கோலாலம்பூர்:

நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நம்பிக்கையில் நட்சத்திர விருது விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

இவ்விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த மூத்த விளையாட்டாளருக்கான விருது டத்தோ சந்தோக் சிங்கிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது கராத்தே வீராங்கனை ஷாமலா ராணிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சமூக இயக்கத்திற்கான விருது பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த தன்முனைப்பு பேச்சாளருக்கான விருது டாக்டர் அண்ணாதுரைக்கு வழங்கப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset