நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது டான்ஸ்ரீ மாரிமுத்துவிற்கு வழங்கப்பட்டது

கோலாலம்பூர்:

நம்பிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது டான்ஸ்ரீ மாரிமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

நம்பிக்கை இணைய ஊடகத்தின் 4ஆவது நட்சத்திர விருது விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழாவின் உச்சக்கட்டமாக வாழ்நாள் சாதனையாளர் மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு விருது வழங்கப்படுகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு அவ்விருது மூத்த அரசியல் தலைவரும் கல்வியாளருமான டான்ஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மாரிமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த அரசு சேவையாளர் விருது போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த முன்னோடி தமிழ்ப்பள்ளிக்கான விருது ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கல்வியாளருக்கான விருது டாக்டர் மனோன்மணி தேவிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவருக்கான விருது டாகடர் நவின் தியாகராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த எழுத்தாளருக்கான விருது பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதை குணாளன் மணியம், சிறந்த நிருபருக்கான விருது பிரேம் ஆனந்த், சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது சுந்தர் ஆகியோர் வென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset