செய்திகள் மலேசியா
நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தகர் விருது விழாவின் வாயிலாக இந்திய தொழில்முனைவோரை குஸ்கோப் அங்கீகரித்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தகர் விருது விழாவின் வாயிலாக இந்திய தொழில்முனைவோரை குஸ்கோப் அங்கீகரித்துள்ளது.
குஸ்கோப் எனும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
பேங்க் ராக்யாட்டின் துன் ரசாக் மண்டபத்தில் நம்பிக்கை ஊட்கத்தின் ஏற்பாடு செய்த அனைத்துலக வர்த்தகர் விருதுகள் 2025 விழாவிற்கான இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துதல் (EIP) முயற்சியின் மூலம் ஆதரவும் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு, மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக மடானி அரசாங்கத்தின் ஒரு மூலோபாய நிகழ்ச்சி நிரலான இந்திய தொழில்முனைவோர் மேம்படுத்தும் முயற்சி மூலம் வழங்கப்பட்டது.
EIP என்பது வெறும் மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்ல. உலகளாவிய வணிக வலையமைப்புகளின் அங்கீகாரம், திறன் மேம்பாடு, அதிகாரமளிப்புக்கான ஒரு தளமாகும்.
மேலும் இந்த ஆதரவு, பெண்கள், இளைஞர்கள்,புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில், தங்களுக்குப் பெயர் பெற்ற இந்திய தொழில்முனைவோரின் வெற்றியை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
இது போன்ற அங்கீகாரம் இந்திய தொழில்முனைவோர் நாட்டில் வெற்றியை அடைவது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையிலும் ஊடுருவ முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்புள்ள டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
முன்னதாக விருதுகளை வழங்குவதற்காக அவர் சார்பாக வந்திருந்த அவரது மூத்த தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் அவரது உரையை நிகழ்த்தினார்.
நம்பிக்கை இணைய ஊடகத்தின் நிறுவனர் டத்தோஸ்ரீ முகமது இக்பால் ராவுதரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
தலைமைத்துவம், பெண்கள் உருமாற்றம், இலக்கவியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் அந்தந்த விருதுகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
செலாயாங் பாருவில் அதிரடி சோதனை: 843 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
December 7, 2025, 9:14 am
