நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவான, நம்பகமான செய்திகளை வழங்குவதில் நம்பிக்கை ஊடகத்தின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

விரைவான,  நம்பகமான செய்திகளை வழங்குவதில் நம்பிக்கை ஊடகத்தின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

நம்பிக்கையின் நட்சத்திர விருது விழா 2025 மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

இவ்விருது விழாவிற்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ சரவணன் தமது உரையில் கூறியதாவது,

கால் நூற்றாண்டு கால குறிப்பிடத்தக்க சேவையைக் கொண்டாடும் வகையில், நம்பிக்கை நட்சத்திர விருதுகளை  வழங்குவது ஒரு மரியாதை.

25 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கையை அச்சு ஊடகமாக நிறுவிய டத்தோஸ்ரீ இக்பாலுக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் நான் மனிதவள அமைச்சராக நான் இருந்த காலத்தில் நம்பிக்கை ஊடகத்தின் இணையத்தை தொடக்கி வைத்தேன்.

இன்று துடிப்பான, உண்மையான இணைய ஊடக பரிணமித்ததில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

போலிகள், சந்தேகத்திற்குரிய தகவல்களின் இந்த சகாப்தத்தில், விரைவான, நம்பகமான செய்திகளை வழங்குவதில் நம்பிக்கையின் அர்ப்பணிப்பு எப்போதையும் விட மிக முக்கியமானது.

அவர்கள் உண்மையிலேயே சிறந்த பணியைச் செய்கிறார்கள்.

25 ஆண்டுகள் உங்களுக்காகவும், 25 ஆண்டுகள் உங்கள் குடும்பத்திற்காகவும், மீதமுள்ள ஆண்டுகளை சமூகத்திற்காகவும் செலவிடுங்கள்.

இதன் மூலம் எம்ஜிஆரைப் போல நீடித்த, பரவலான பாராட்டைப் பெறுவீர்கள்.

இவ்விழாவில் தகுதியான அனைத்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நம்பிக்கை குழுமம்,  சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இவ்விருது விழாவில் முக்கிய அங்கமாக சுப்ரிம் ஸ்டார் சரத்குமார், நடிகை ராதிகா உட்பட பலருக்கு டத்தோஸ்ரீ சரவணன் விருதுகளை எடுத்து வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset