நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்

புத்ராஜெயா: 

உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது என பட்டம் பெற்ற மாணவார்கள் பெருமிதத்துடன் கூறினர்.

பெர்டானா பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா புத்ரா ஜெயாவில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் விமர்சியாக நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவை மலாக்காாநில ஆளுநர் துன் டாக்டர் முகமட் அலி ரோஸ்தாம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

அதே சமயம் நமது இந்திய மாணவர்களும் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பெர்டானா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கும்  மேற் கல்வியை தொடர்வதற்கும் பெர்டானா பல்கலைக்கழகம் வாய்ப்பை வழங்கி வருகிறது.

ஆகவே பெர்டானா பல்கலைக்கழகம் வழங்கி வரும் இந்த அரிய வாய்ப்புகளை நமது இந்திய மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு பெர்டானா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset