செய்திகள் மலேசியா
செலாயாங் பாருவில் அதிரடி சோதனை: 843 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
கோலாலம்பூர்:
செலாயாங் பாருவில் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையில் 843 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மந்திரி புசாரும் மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
இங்குள்ள செலாயாங் பாருவில் நேற்று இரவு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் குடியேற்றச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 35 பெண்கள் உட்பட மொத்தம் 843 சட்டவிரோத அந்நிய நாட்டின கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா, மியன்மார், நேப்பாளம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றுவது குறித்து சமூகத்திடமிருந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சாலையோரங்களில் வணிகங்களை நடத்தி வந்த சிலர் அடங்குவர் என்று அவர் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 9:14 am
