நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு; குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போலிசாருக்கு ஆடியோ பதிவு கிடைத்தது: ஐஜிபி

கோலாலம்பூர்:

மலாக்காவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போலிசாருக்கு ஆடியோ கிடைத்தது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

மலாக்கா துரியான் துங்காலில் அண்மையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட   ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒப்படைத்த ஒரு குறுந்தகடு (சிடி) போலிசாருக்குக் கிடைத்துள்ளது.

சம்பவத்திற்கு முன்பு சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு அந்த சிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னதாக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி புக்கிட் அமான் மட்டத்தில் ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள ஒரு மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார்.

அக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும்.

மேலும் விசாரணையின் ஒவ்வொரு அம்சமும் முறையாகவும், தொழில் ரீதியாகவும், எந்த சமரசமும் இல்லாமல் ஆராயப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset