செய்திகள் மலேசியா
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
பேங்காக்:
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மீண்டும் வென்றுள்ளது.
ஆசிய கல்வி விருது விழா தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்றது.
கல்வித் துறையை சேர்ந்த பலருக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் கல்விக்கான சிறந்த சேவை விருதை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மீண்டும் வென்றது.
அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் விக்னேஷ் அவ்விருதை பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ்,
மாணவர்களுக்கு உயர் கல்வி மிகவும் முக்கியமாகும். அக்கல்வியை மாணவர்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
அவ்வகையில் அம்மாணவர்களுக்கு அனைத்து விதமான வழிகாட்டல்களையும் பியோன்ட் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.
இன்று வரை கல்வி, நிதி ஆலோசனை சேவைகள் மூலம் 4,598 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்துள்ளோம்.
அவர்களின் படிப்பு விருப்பங்களை வழிநடத்தவும், உயர்கல்வியின் வழியில் பெரும்பாலும் நிற்கும் தடைகளை கடக்கவும் உதவுகிறோம்.
இதன் அடிப்படையில் தான் இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
அவ்வகையில் அடுத்தாண்டு மேலும் பல திட்டங்களை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மேற்கொள்ளும் என்று விக்னேஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
